இந்நாட்டில் உள்ள மலாய் முஸ்லிம்கள் மற்ற சிறுப்பான்மையினரை ஒதுக்கி வைக்கும் அளவுக்குப் பகட்டாகவும், தலைக்கனத்துடனும் இருக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூறுத்தியுள்ளார்.
இன்று நிதி அமைச்சின் பணியாளர்களின் மாதாந்திர பேரணியில் உரையாற்றுகையில் நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.
பெளத்த மதத்தினரைப் பெரும்பான்மையினராக கொண்டுள்ள கம்போடியாவில் முஸ்லீம்கள் 10 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளனர். ஆனால், அங்குள்ள பெளத்த மதத்தினர், முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து மகிழ்வுடன் வாழ்கின்றனர். முஸ்லீம்கள் மிக உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.
அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதில்லை என்பதை அண்மையில் கம்போடியாவிற்கு மேற்கொண்ட வருகையின் போது தம்மால் நேரடியாக அறிய முடிந்ததாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
கம்போடியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனை பாதுகாப்பதற்காக அவர்களின் பிரதிநிதியாக ஒரு முஸ்லீமை அமைச்சராக நியமித்துள்ளனர். முஸ்லீம்களுக்குப் பல வாய்ப்புகளை அந்த நாடு வழங்கியுள்ளது என்று அன்வார் விளக்கினார்.
பெரும்பான்மையான பௌத்தர்களைக் கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மையினருக்கு எத்தகைய பரஸ்பர மரியாதை அளிக்கப்பட்டு, வழிநடத்தப்படுகின்றனர் என்பதை கம்போடியாவிடமிருந்து மலேசியாவில் உள்ள பெரும்பான்மையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

தற்போதைய செய்திகள்
மிக வசதியாக இருப்பதாக தலைகனத்துடனும் இருக்க வேண்டாம்! மலாய்க்கார முஸ்லீம்களுக்குப் பிரதமர் அன்வார் நினைவுறுத்து
Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


