கோலாலம்பூர், ஜனவரி.17-
தொடக்கப்பள்ளி மதிப்பீட்டுத் தேர்வான யுபிஎஸ்ஆர் மற்றும் படிவம் மூன்று மதிப்பீட்டுத் தேர்வான பிடி3 ஆகியவற்றை மீண்டும் அமல்படுத்துமாறு கல்வி அமைச்சை அம்னோ வலியுறுத்தியுள்ளது.
இவ்விரு தேர்வுகளையும் மீண்டும் நடைமுறைப்படுத்தும் இந்த இலக்கை கட்சி நிச்சயம் அடையும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தைத் தேர்வு வாரியத்தில் வலியுறுத்த அம்னோ பேராளர்களின் ஆதரவைத் தாம் கோருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கான பொறுப்பை உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிரிடம் ஒப்படைக்கிறோம் என்று இன்று சனிக்கிழமை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையின் இறுதி உரையின் போது ஸாஹிட் இதனைக் கூறினார்.








