ஜோகூரில் மசாய், கெலாங் பாத்தா,கூலாய், மூவார், பெர்மாஸ் ஜயா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது அவை பாதுகாப்பாக இருப்பதாக ஜோகூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.
மின்னஞ்சல் வழி வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக முற்பகல் 11 மணி முதல் மாலை 6.18 மணி வரை தமது தரப்புக்கு 5 காவல் துறை புகார் கிடைத்தது எனவும் காவல் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் K-9 பிரிவும் அந்த பள்ளிகளுக்கு சென்றுள்ளதாகவும் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை எனவும் அவர் சொன்னார்.








