கோலாலம்பூர், செப்டம்பர்.06-
சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் செக்குபார்ட் என்று அழைக்கப்படும் பட் ருல் ஹிஷாம் ஷாஹரின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் முதல் தேதி பேரா, பாகான் செராயில் நிகழ்ச்சி ஒன்றில் நிந்தனைத்தன்மையில் உரையாற்றியது மற்றும் அரச பரிபாலனம் தொடர்பில் அடிப்படையற்றக் குற்றச்சாட்டை முன் வைத்தது தொடர்பில் செக்குபார்ட், நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இரவு 10.25 மணியளவில் கைது செய்யப்பட் 47 வயதான செக்குபார்ட், விசாரணைக்கு ஏதுவாக நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
பாகான் செராய் நிகழ்ச்சியில் நிந்தனைத்தன்மையில் செக்குபார்ட் உரையாற்றிய காணொளி ஒன்று டிக் டாக்கில் பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
1948 ஆம் தேச நிந்தனைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவை அவருக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் விளக்கினார்.








