Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனிதனும் சுற்றுச்சூழலும் பாடத் திட்டத்திற்கு மகத்தான வரவேற்பு
தற்போதைய செய்திகள்

மனிதனும் சுற்றுச்சூழலும் பாடத் திட்டத்திற்கு மகத்தான வரவேற்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

வரும் 2027 கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மனிதனும் சுற்றுச்சூழலும் என்ற பாடத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதை கல்விமான்கள் பரவலாக வரவேற்றுள்ளனர்.

மனிதனும், சூற்றுச்சூழலும் பாடத் திட்டம், அறிவியலின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். சுற்றுச்சூழல், வரலாறு, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள், அமைப்பு முறை ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ளது.

இந்தப் பாடம் மாணவர்களின் மன வளத்தை மேம்படுத்தக்கூடியதாகும் என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகமட் எஃப்பெண்டி எவான் முகமட் மத்தோர் தெரிவித்துள்ளார். இது ஓர் அர்த்தமுள்ள பாடத் திட்டமாகும். மாணவர்களின் நடத்தையை மேம்படுத்தக்கூடியதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

உப்சி UPSI கல்வியல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒத்மான் தாலிப் கூறுகையில் தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், நன்னெறி கல்வி, புறப்பாட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் மனிதனும் சுற்றுச்சூழலும் பாடமும் சேர்க்கப்படுவது மாணவர்களைக் கல்வி ரீதியாகச் செம்மைப்படுத்த உதவும் என்றார்.

1982 ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மனிதனும் சுற்றுச்சூழலும் பாடத் திட்டம், 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட KBSR எனும் தொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி முறையில், அந்த பாடத் திட்டம் அகற்றப்பட்டு , அறிவியலும், வாழ்வியலும் எனும் பாடத் திட்டமாக உருமாற்றம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News