பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம் முன்னிட்டு அறிமுகப்படுத்திய தங்களின் சின்னத்தையும் கருப்பொருளையும் தொடர்ந்து பயன்படுத்தும் என அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி மீண்டும் அறிவிப்பு செய்துள்ளார்.
தேசிய தினம் கொண்டாட்டம் தொடர்பாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞ்சர் பிரிவு அறிமுகம் செய்துள்ள சின்னமும் கருப்பொருளும் வலைத்தளங்களில் நாட்டின் பற்றை வெளிப்படுத்த மட்டுமே பயன்படுத்த படும் என கூறி உள்ளார்.
தாங்கள் அறிமுகம் செய்துள்ள சின்னம் மற்றும் கருப் பொருள் தொட்டு எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்று பெரிக்கத்தான் நெசனல் ஆட்சி செய்யும் மாநில மந்திரி பெசார்களிடம் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தாது என பெரிக்கத்தான் நெசனல்
இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறினார். .








