Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் சிந்தனையில் விஷத்தை கலக்கிறார்
தற்போதைய செய்திகள்

மக்களின் சிந்தனையில் விஷத்தை கலக்கிறார்

Share:

மலாய்க்காரர் அல்லாத ஒருவர் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று கூறியிருக்கும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், மக்களின் சிந்தனையில் விஷத்தை கலக்கிறார் என்று பாஸ் கட்சி கூறுகிறது.

நாட்டில் நல்லிணக்கமற்ற சூழலை உருவாக்குவதற்கு அந்த டிஏபி தலைவர் முயற்சிகிறார் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாஸ்ஸான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிஏபி யின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங் இதே விவகாரத்தை எழுப்பினார். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு லிம் கிட் சியாங் இது குறித்து பேசினார்.

தற்போது மீண்டும் அதே விவகாரத்தை தொட்டு, லிம் கிட் சியாங் பேசியுள்ளார் என்று தக்கியுடின் ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News