May 24, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்த மகன் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்
தற்போதைய செய்திகள்

கொலை செய்த மகன் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்

Share:

பாகோ,ஆகஸ்ட் 19-

பெற்றோரைக் கொலை செய்து, பின் அவர்கள் இருந்த வீட்டிற்கு தீ வைத்தது, உறவுக்காரப்பிள்ளையைத் தாக்கியது ஆகிய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 48 வயது ஆடவர் மீது நாளை ஜோகூர், முவார் மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

ஜொகூர் பாகோ, கம்புங் பய ரெடன்-இல் நேர்ந்த அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு அந்த ஆடவரின் தடுப்புக்காவல் நாளை நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயங்களுக்கு இலக்கான 11 வயது நோராட்ரியானா நோர் ஹாசிம் என்ற உறவுக்காரப்பிள்ளை பகர் சுல்தானா பாத்திமா மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related News