கோலாலம்பூர், ஜனவரி.29-
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள உடம்புப்பிடி நிலையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வார கண்காணிப்பிற்குப் பிறகு, கோலாலம்பூர் மற்றும் பூச்சோங்கில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
அழகு நிலையங்கள், உடம்புப்பிடி நிலையங்கள் என்ற பெயரில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் அவ்விடங்களில் இருந்து, 12 பிலிப்பைன்ஸ் பெண்கள், 6 வியட்நாம் பெண்கள் மற்றும் ஒரு மங்கோலியப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது போன்ற சட்டவிரோதச் சேவைகள் குறித்து வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் இரகசியமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்ததாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக புத்ராஜெயா தலைமையகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.








