கூச்சிங், ஜனவரி.11-
சரவாக்கின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் 26 பள்ளிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததோடு, சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நாளை நடைபெறவிருந்த நேரடிப் பள்ளி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித் துறை இயக்குநர் ஓமார் மாஹ்லி தெரிவித்தார். குறிப்பாக Daro , Selangau , Tatau , Sebauh ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் நீரில் மூழ்கி இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்தப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் நிலவினாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இணையம் வழியாகவோ அல்லது 'PdPR' முறையிலோ பாடங்களை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ள நிலவரம் குறித்துப் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கல்வி அலுவலகம் வாயிலாகத் தெரிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








