Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் சிக்கனம்: தீயணைப்புத் துறை புதிய நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

எரிபொருள் சிக்கனம்: தீயணைப்புத் துறை புதிய நடவடிக்கை

Share:

பத்து காவான், ஏப்ரல்.05-

எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, அவசரமற்ற இதர சேவைகளுக்கான எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மலேசியத் தீயணைப்பு , மீட்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவசரக்கால மீட்புப் பணிகளுக்கான வாகனப் பயன்பாட்டில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று உறுதிபடத் தெரிவித்த அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட், அதே வேளையில் பயன்பாட்டு வாகனங்களின் தேவையற்ற இயக்கத்தைக் குறைக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, தீயணைப்பு நிலையங்களுக்கு இடையிலான கூட்டங்களை இணையம் வாயிலாக நடத்தவும், பொதுக் கல்வித் திட்டங்களை வாகன நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் மாற்றி அமைக்கவும் மாநிலத் தீயணைப்பு இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையின் இந்த எரிபொருள் மேலாண்மை குறித்த வாராந்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவை வீட்டுவசதி, ஊராட்சி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News