Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தமிழ் வாழ்த்து, கடவுள் வாழ்த்து விவகாரம் : பொறுப்பற்ற அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தகவல் .
தற்போதைய செய்திகள்

தமிழ் வாழ்த்து, கடவுள் வாழ்த்து விவகாரம் : பொறுப்பற்ற அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தகவல் .

Share:

தேசிய நிலையில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து, கடவுள் வாழ்த்துப் பாடல்களைத் தடை செய்த அதிகாரிக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கப்பட வில்லை என்பதை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி த்யாகராஜ் சங்கர நாராயனன் தெரிவிக்கயில், அந்த ச்சம்பவத்திற்குக் காரணமாக அதிகாரி வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

தவறு செய்த எந்த அதிகாரியையும் கல்வி அமைச்சு பாதுகாக்காது எனவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி எனவும் அமைச்சர் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ், கடவுள் வாழ்த்துப் பாடல்களுக்குத் தடையாக இருந்த அதிகாரி மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வில்லை என இணையவாசிகள் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து த்யாகராஜ் இவ்வாறு பதிலளித்தார்.

Related News