Oct 28, 2025
Thisaigal NewsYouTube
சீனப்பள்ளிகளின் தேர்ச்சி அடைவு நிலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யுங்கள்
தற்போதைய செய்திகள்

சீனப்பள்ளிகளின் தேர்ச்சி அடைவு நிலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யுங்கள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.27-

சீனப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அடைவு நிலையை அடிப்படையாகக் கொணடு அந்த தாய்மொழிப்பள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமே தவிர அந்தப் பள்ளிகளின் பொது மண்டபங்களில் நடத்தப்படும் தனிப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு மதிப்பிட வேண்டாம் என்று எம்.பி. ஒருவர், இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சீனப்பள்ளி மண்டபங்களில் என்ன நடக்கின்றன, என்ன நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், மதுபானம் பரிமாறப்படுகிறதா? முதலிய ஆராய்ச்சிகளை விடுத்து, சீனப்பள்ளி மாணவர்கள் சாதித்து வரும் அடைவு நிலையை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பள்ளிகள் நோக்கப்பட வேண்டும் என்று ரவூப் எம்.பி. Chow Yu hui வலியுறுத்தினார்.

சீனப்பள்ளிகளின் பொது மண்டபங்களில் நிதி திரட்டும் நிகழ்வுகளில் மதுபானம் உபரிப்பு நடைபெற்றதாக சில தரப்பினர் கேள்வி எழுப்பி வருவது தொடர்பில் அந்த ஜசெக. எம்.பி. தனது வாதத்தை இன்று முன்வைத்தார்.

சீனப்பள்ளிகளின் பொது மண்டபங்களில் மதுபானம் தொடர்புடைய பொது நிகழ்வுகள் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் அந்தப் பள்ளிகள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பான அடைவு நிலை பெற்று வருவதை அவர் புள்ளி விவரங்களுடன் சுட்டிக் காட்டினார்.

Related News