Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத சூதாட்டத்தில் எழுவர் கைது !
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத சூதாட்டத்தில் எழுவர் கைது !

Share:

கூலிம் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற Ops Dadu சோதனையின்போது, சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டிருப்பத்தாக கெடா மாநில காவல்துறை தலைவர் டத்தோ பிசோல் பின் சாலே தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இரவு 8.00 மணி அளவில் கூலிம், சுங்கை கோப்பிலுள்ள தாமான் முத்தியாராவில் 21 வயது முதல் 62 வயதுடைய 5 ஆடவர்களை காவல் துறை கைது செய்திருப்பதோடு சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து கைத்தொலைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் .

அதே நாளில் சுங்கை கோப் வட்டாரத்திலுள்ள கடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில், உள்நாட்டைச் சேர்ந்த 19 மற்றும் 38 வயதுடைய இரு ஆடவர்களை சட்டவிரோத லாட்டரி சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக கைது செய்யபட்டனர் எனவும் பிசோல் தகவல் அளித்தார். அவர்களிடமிருந்து ரொக்கமும் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சில பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியத்தாக அவர் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் சூதாட்ட அமையச் சட்டம் 1953இன் படி விசாரணை நடத்தப்படும் என்றார் டத்தோ பிசோல்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை