கோல கிராய், அக்டோபர்.08-
34 மாணவர்களையும், 6 ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று, லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து இன்று காலை 9 மணியளவில் கிளந்தான், கோத்தா பாரு – குவா மூசாங் சாலையின் 63 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமின்றி உயிர் தப்பினர் என்று கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.
பாச்சோக், ஶ்ரீ குனோங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் கேமரன் மலைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள பேருந்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.








