Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நிறுவனத்திற்குச் சொந்தமான பனத்தைத் தவ்றாகப் பயன்படுத்திய பெண்மணிக்கு 6 மாதங்கள் சிறை
தற்போதைய செய்திகள்

நிறுவனத்திற்குச் சொந்தமான பனத்தைத் தவ்றாகப் பயன்படுத்திய பெண்மணிக்கு 6 மாதங்கள் சிறை

Share:

1.5 மில்லியன் வெள்ளி நிதி முறைகேடு வழக்கில் நிறுவனத்தின் நிர்வாக மேலாளருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது.

38 வயது டான் ஐ-லின்க்கு இந்த தண்டனையை மாஜிஸ்திரேட் சபரியா ஒத்மான் விதித்தார்.

டான் ஐ-லின் பணிபுரியும் Syarikat Ada Vinci Global Sdn Bhdக்குச் சொந்தமான 15 இலட்சத்து 18 ஆயிரத்து 422 வெள்ளி 88 காசையும் 58 ஆயிரத்து 354 வெள்ளியையும் அவர் தவறான முறையில் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அவர் இந்தக் குற்றத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதிக்குள் செய்திருக்கிறார் எனக் குற்றச்சாட்டப்பட்டிருந்தார்.

Related News