கோலாலம்பூர், ஜூலை.16-
சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு 90 நாட்கள் வரை இலவச விசா வழங்கப்படுகிறது. இது நாளை ஜுலை 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மலேசியாவிற்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
மலேசியாவும், சீனாவும் கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு 180 நாள் காலத்திற்குள் மொத்தம் 90 நாட்கள் வரை குறுகிய கால வருகைக்காக இந்த விசா விலக்களிப்பு வழங்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.








