Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை

Share:

நாட்டில் தற்போது நிலவிவரும் வெப்பநிலையைத் தொடர்ந்து, பள்ளியைத் தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரையில் எந்தவொரு பள்ளி நிர்வாகத்திடமிருந்து விண்ணப்பத்தைக் கல்வி அமைச்சு பெறவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங் தெரிவித்துள்ளார்.

கெடா மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்த போதிலும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளிடமிருந்தும் எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படவில்லை என்று லிம் ஹூய் இங் குறிப்பிட்டார்.

வெப்பத்தின் அளவு 37 செல்சியஸ்சை தாண்டி, 3 நாட்களுக்கு நீடிக்குமானால், பள்ளியை மூடுவதற்குக் கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News