Jun 29, 2026
Thisaigal NewsYouTube
போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கிட் இழப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.22-

முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தை நம்பி 81 வயது முதியவர் ஒருவர் 303 ஆயிரத்து 958 ரிங்கிட்டை இழந்துள்ளதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாகக் கூறி ஆசை காட்டிய மர்ம நபர்கள், அந்த முதியவரிடமிருந்து 15 தவணைகளாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் Hoo Chan Hook தெரிவித்துள்ளனர். ஈட்டிய ஆதாயத்தை எடுக்க வேண்டுமானால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் மீண்டும் வற்புறுத்திய போதே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர், தற்போது இது குறித்து காவற்படையினரிடம் புகார் செய்துள்ளார்.

Related News

போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கி... | Thisaigal News