தங்களை போலீஸ்கார்கள் என்று அடையாளம் கூறிக்கொண்டு, பொதுமக்களை ஏமாற்றி, பணம் பறித்து வந்த கும்பல் ஒன்றை பினாங்கு போலீசார் முறியடித்துள்ளனர்.
நேற்று பாலிக் பூலாவ், கம்போங் ஜாவாவில் ஒரு வீட்டில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
24 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்த மூன்று ஆடவர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.








