Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மக்களளையில் தாக்கல் செய்யப்பட்டது தொழிலாளர்களுக்கு 24 மணி நேரம் சமூகப் பாதுகாப்புச் சலுகை மசோதா
தற்போதைய செய்திகள்

மக்களளையில் தாக்கல் செய்யப்பட்டது தொழிலாளர்களுக்கு 24 மணி நேரம் சமூகப் பாதுகாப்புச் சலுகை மசோதா

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.30-

மலேசியத் தொழிலாளர்களுக்கு வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் அவர்களுக்கு 24 மணி நேரமும் சமூக பாதுகாப்புச் சலுகையை வழங்க வகை செய்யும் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சட்டவிதி திருத்தம் மீதான சட்ட மசோதா, இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

உத்தேசச் சட்ட மசோதா, முதலாவது வாசிப்புக்காக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தாக்கல் செய்தார்.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இரணடாவது வாசிப்புக்கும் விடப்படும் என்று மனித வள அமைச்சர் குறிப்பிட்டார்.

சொக்சோ சட்டத்தில் மலேசியத் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் சமூகப் பாதுகாப்புச் சலுகையை வழங்குவதற்கு ஏதுவாக மனித வள அமைச்சின் கீழ் உள்ள சொக்சோ சட்டத்தில் 1969 ஆம் ஆண்டு சமூக பாதுகாப்பு ஷரத்தின் 4 ஆவது விதி திருத்தம் செய்யப்படவிருப்பதாக ஸ்டீவன் சிம் மக்களவையில் விளக்கம் அளித்தார்.

Related News