ஜோகூர் பாரு, அக்டோபர்.05-
ஜோகூர், பொந்தியானின் பெக்கான் நெனாசில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலாயு ராயா தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண மையம் இன்று பிற்பகல் 2 மணியுடன் முழுமையாக மூடப்பட்டது என்று ஜோகூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் அறிவித்தார். முகாமில் தங்கியிருந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், பொந்தியான் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமை முழுமையாகச் சீரடைந்துள்ளது என்று அவர் உறுதிப்படுத்தினார்.








