May 21, 2026
Thisaigal NewsYouTube
இடிபாட்டில் தலைசிக்கி தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

இடிபாட்டில் தலைசிக்கி தொழிலாளி மரணம்

Share:

பேரங்காடி மையம் ஒன்றில் மின் தூக்கியின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி ஒருவர் கதவுகளின் இடிபாட்டில் தலை சிக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பர்மாவில் உள்ள ஒரு பேங்காடி மையத்தில் நிகழ்ந்தது.

28 வயது ஆர். தினேஷ் குமார் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக பகன் ஜெர்மால் தீயணைப்பு, மீட்புப்படை நிலைய அதிகாரி அஹ்மாட் ரெஸ்கி ஃபாரிஸ் தெரிவித்தார்.

தனது உதவியாளருடன் மின் தூக்கி பராமரிப்பு பணியில் தினேஷ் குமார் ஈடுபட்டு இருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

மின்தூக்கியின் கதவுகளுக்கு இடையில் தலை சிக்கி தினேஷ் குமார் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Related News