Oct 7, 2026
Thisaigal NewsYouTube

பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் உடலில் காயம் கண்டுபிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் உடலில் காயம் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் இன்று இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவரின் உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் ஆரா சிங் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நாட்டின் முன்னணி சவப் பரிசோதனை தடயவியல் நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் புபிண்டர் சிங் முன்னிலையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் மாணவர் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அந்த மாணவனின் பெற்றோர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் நரான் சிங் குறிப்பிட்டார்.

எனினும் அந்த மாணவரின் உடலில் எந்தப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளன என்பதை விவரிக்க அவர் மறுத்து விட்டார். காலை 9 மணிக்குத் தொடங்கிய சவப் பரிசோதனை மாலை 4 மணிக்கு முடிவுற்றதாக அவர் தெரிவித்தார்.

22 வயதுடைய அந்த பயிற்சி மாணவன் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மரணமுற்றதாக அவரின் குடும்பத்தினர் சந்தேகித்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடலைக் கல்லறையிலிருந்து தோண்டுவதற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு