புத்ராஜெயா, அக்டோபர்.22-
அண்மையில் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாகப் பள்ளி வளாகங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் அமைச்சரவையின் புதிய கட்டளையைத் தொடர்ந்து, காவற்படை காவல் சுற்றுப் பணியை அதிகரிக்க வேண்டிய பள்ளிகளைக் கண்டறியக் கல்வி அமைச்சு காவல்துறையுடன் இணைந்து செயல்படவுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 12 ஆயிரம் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் கட்டொழுங்கு, குழுச் சண்டைகள், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தரவுகளைக் கொண்டு காவற்படை தற்போது காவல் சுற்றுப் பணிக்கான அட்டவணையை மறுசீரமைத்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
மேலும், கல்வி அமைச்சு தேர்ந்தெடுக்கும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கூடுதல் 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உட்பட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கல்வி அமைச்சு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் உறுதிப்படுத்த உறுதி பூண்டுள்ளது.








