Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மாது மானபங்கம், மருத்துவர் கைது
தற்போதைய செய்திகள்

மாது மானபங்கம், மருத்துவர் கைது

Share:

பாலிக் பூலாவ், ஜூலை.22-

தன்னிடம் மருத்துவ ஆலோசனை கேட்க வந்த மாது ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் தனியார் கிளினிக் ஒன்றின் மருத்துவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பினாங்கு, பாயான் பாருவில் உள்ள ஒரு கிளினிக்கில் கடந்த ஜுன் 29 ஆம் தேதி நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாது போலீசில் புகார் செய்துள்ளார்.

மருத்துவச் சோதனை என்ற பேரில் மேலாடையை அகற்றக் கூறி, அந்த மருத்துவர் ஆபாசச் சேட்டைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. விசாணைக்காக அழைக்கப்பட்ட 43 வயதுடைய அந்த மருத்துவர் பின்னர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

Related News