Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பாலத்திலிருந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து.. பரிதாபமாக பறிபோன 21 உயிர்கள்! இத்தாலியில் சோகம்
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து.. பரிதாபமாக பறிபோன 21 உயிர்கள்! இத்தாலியில் சோகம்

Share:

ரோம்: இத்தாலியில் சுற்றுலா பேருந்து மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள மெஸ்ட்ரேயில் மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறுகையில், "வெனிஸிலிருந்து அருகிலுள்ள மார்கெராவுக்குப் பயணிகளுடன் இந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்தபோது நாங்கள் உறக்கத்தில் இருந்தோம். பேருந்து பாலத்திலிருந்து பறந்து சென்று கீழே விழுந்திருக்கிறது. நாங்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டோம்.

முதற்கட்டமாக 18 பேர் காயமடைந்திருப்பதாக தெரிய வந்தது. ஆனால் அதன் பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளார். விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே திடீரென அந்த பேருந்து தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்தது. கீழே விழுந்தவுடன் அது தீப்பற்றிக்கொண்டது" என்று கூறியுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுடன் வந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Related News