Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கையில் சிக்கிய சீனக் கும்பல்!
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கையில் சிக்கிய சீனக் கும்பல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.12-

கடந்த அக்டோபர் 9 ஆம் நாள் கோலாலம்பூர், ஜாலான் பி. ரம்லி பகுதியில் மலேசிய குடிநுழைவுத் துறையின் அதிரடிப் பிரிவினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், சீன நாட்டவர்களால் நடத்தப்பட்ட இணையச் சூதாட்ட நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இரகசியத் தகவல்களாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலும் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில், 10 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள், சமூகப் பயண அனுமதி வைத்திருந்தவர்கள், விசா காலாவதியானவர்கள் ஆகியோர் அடங்குவர் என மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கும்பல், ஆடம்பர குடியிருப்பு வளாகத்தை தங்கள் இரகசிய இணையச் சூதாட்ட மையமாகப் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டுச் சந்தைகளைக் குறிவைத்து, டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தி வந்துள்ளனர். இந்த மையத்தில் இருந்து 11 மடிக் கணினிகள், 7 கைபேசிகள், 3 கணினிகள், 3 ஆயிரத்து 900 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related News