நாளை சனிக்கிழமை ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில், பலர் தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலபரப்படி அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சாலை 9 மணியளவில் வடக்கை நோக்கி சிலீம் ரிவரிலிருந்து சுங்க்கை வரையிலும், தாப்பாவிலிருந்து கோப்பெங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.
கிழக்கு கரை மாநிலங்களுக்கான முதன்மை நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதையிலிருந்து கெந்திங் செம்பா ஓய்வுத் தளம் வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


