ஜோகூர் பாரு, நவம்பர்.10-
ஜோகூர் பாரு, கம்போங் கன்கார் தெப்ராவ், ஜாலான் துன் ஃபாத்திமாவில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து தரை வீடுகள் அழிந்தன.
தீ பரவிய அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் கட்டியத் துணியோடு வெளியேறியதால் யாரும் காயமடையவில்லை. உடமைகள் பெரியளவில் அழிந்தன.
இந்தத் தீச் சம்பவம் குறித்து இரவு 8.12 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய கமாண்டர் ஷாரில் சாபார் தெரிவித்தார்.
ஐந்து வீடுகளிலும் பரவிய தீ, இரவு 9.35 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








