புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.15-
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் குபாங் செமாங்கில் உள்ள ஓர் உணவகம் முன்புறம் ஆடையின்றி ரகளை புரிந்த புத்தி சுவாதீனமற்ற ஆடவர் ஒருவரைப் பிடிப்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.46 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படை அவ்விடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில உதவி இயக்குநர் ஜோன் சகூன் தெரித்தார்.
கையில் கூர்மையான ஆயுதத்தை ஏந்திய நிலையில் ஆவேசமாகச் செயல்பட்ட அந்த நபரைப் பிடிப்பதற்கு ஆறு பேர் கொண்ட வீரர்கள், அந்த மியன்மார் ஆடவர் மீது தீயணைப்பு வண்டியின் பீராங்கி நீரைப் பாய்ச்சி வளைத்துப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் அந்த ஆடவர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








