Jun 29, 2026
Thisaigal NewsYouTube
துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களை தாயகத்திற்குத் திருப்பி அனுப்ப மலேசியத் தூதரகங்கள் முயற்சி
தற்போதைய செய்திகள்

துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களை தாயகத்திற்குத் திருப்பி அனுப்ப மலேசியத் தூதரகங்கள் முயற்சி

Share:

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை, தாயகத்திற்குத் திருப்பி அனுப்பும் முயற்சிகளில், அங்குள்ள மலேசிய துணைத் தூதரகம் ஈடுபட்டு வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விமானங்களை அதிகரிக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், துபாயில் சிக்கியுள்ள அனைத்து பயணிகளும் தங்கள் விமானங்களின் சமீபத்திய நிலையை அறிய, அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தற்போது துபாய் பாதுகாப்பாக இருப்பதாகவும், அன்றாட நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள மலேசியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் மற்றும் தூதரகத்தின் சமீபத்திய அறிவிப்புகளைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலேசிய வெளியுறவு அமைச்சின் சமீபத்திய அறிக்கையின் படி, போர் சூழல் நிலவி வரும் மத்திய கிழக்குப் பிரதேசங்களில், 29 ஆயிரத்திற்கும் அதிகமான மலேசியர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News