பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமய போதகர் சக்கிர் நாயிக் தாக்கல் செய்த வழக்கில், இராமசாமி தோல்வியுற்றிருந்தார். எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சக்கிர் நாயிக்கிற்கு நஷ்ட ஈடாக கொடுப்பதற்காக 1.52 மில்லியன் வெள்ளியைத் திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இராமசாமி.
இன்று பிற்பகல் செந்தூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, திரட்டப்படும் நிதி வெளிப்படையாக சேகரிக்கப்படும் என்றும், அதிகமாக இருந்தால் பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மேல்முறையீடு செய்வார் என்றும் இராமசாமி தெரிவித்தார்.
அவரது ஐந்து அறிக்கைகளில் சக்கிர் நாயிக் மீது அவதூறு தெரிவிக்கும் வகையில் உள்ள கூறுகளை உள்ளடக்கியதாக சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவற்றில் சக்கிருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எதுவும் கூறப்படவில்லை, மாறாக மலேசியர்களின் பாதுகாப்பிற்காக வெளியிடப்பட்டது என இராமசாமி செய்தியாளர்களிடம் சொன்னார்.
“சீனர், இந்தியர், மலாய்க்காரர், இபான், மலேசியாவில் இருக்கும் இதர இனத்தவருக்காகத் தாம் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
தனக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் சக்கிர் நாயிக்தொடுத்திருந்த அவதூறு வழக்கில் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி தோல்விக் கண்டார். மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை கொண்டுள்ள ஓர் இந்தியப் பிரஜையான சாக்கிர் நாய்க்கிற்கு க்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த சமயப் போதகருக்கு நஷ்ட ஈடாக 1.52 மில்லியன் வெள்ளியை டாக்டர் இராமசாமி வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அக்மால் அப்துல் அசிஸ் இன்று உத்தரவிட்டிருந்தார்.







