கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
ஜோகூர், செகாமட் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியிலுள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாய்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பெட்ரோனாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டவுடன், நிறுவனம் தனது தொழில்நுட்பக் குழுக்களை அனுப்பி பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. அனைத்து எரிவாயு குழாய்களும் பாதுகாப்பாகவும், வழக்கமான முறையில் இயங்குவதாகவும், வழக்கத்திற்கு மாறான எந்த மாற்றங்களும் கண்டறியப்படவில்லை என்றும் பெட்ரோனாஸ் தெரிவித்தது.








