சபா, கோத்தா கினபாலுவில் கட்டப்பட்டுவரும் தொழிற் சாலை கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படாததால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. சம்பளப் பணம் கொடுக்க தாமதமானதால் அங்குள்ள தொழிலாளர்கள் சினம் கொண்டு அவர்களின் கோரியா நாட்டை சேர்ந்த முதலாளியைத் தாக்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மனித வள அமைச்சின் துணை அமைச்சர் முஸ்தப்பா சக்முட் அங்குப் பணிபுரியும் 600 தொழிலாளிகளுக்கு உடனே சம்பளப் பணத்தைக் கொடுக்க உத்தரவு விடுவித்துள்ளார்.
ஏறக்குறைய 38 லட்ச வெள்ளி மொத்த சம்பள தொகை கொடுக்க வேண்டி உள்ளதால் அதன் முதலாளி அப்பணத்தை இன்று அல்லது நாளை தந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக சபா தொழிலாளர் துறை பிரிவு தெரிவித்துள்ளது.








