Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரு மாநிலங்களில் புதன் வரை தொடர் கன மழை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரு மாநிலங்களில் புதன் வரை தொடர் கன மழை

கோலாலம்பூர், டிச.9-

கிழக்கு கரையோர மாநிலங்கள் உட்பட ஏழு மாநிலங்களில் வரும் புதன்கிழமை வரை கடும் மழை நீட்டிக்கும் என்று வானிலை ஆய்வுத்துறை மையமான மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில் குவாந்தன், பெக்கான், ஜெராண்டுட், மாரான் மற்றும் ரொம்பின் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், திரங்கானுவில் உள்ள கெமாமான் மற்றும் டுங்குன் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மோசமான அளவிலான கனமழை பெய்யும் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கிளந்தான் மற்றும் பெர்லிஸ் முழுவதும் எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநிலத்தின் உலு பேராக், மற்றும் கெடா மாநிலத்தின் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெராப், பெண்டாங், சிக், பாலிங் ஆகிய மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகாங் மாநிலத்தின் கேமரன் ஹைலண்ட்ஸ், லிப்பிஸ், ரவுப், பெந்தோங், தெமர்லோ ஆகிய மாவட்டங்களும் கடும் வானிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட் மலேசியா குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →