கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
கோலாலம்பூர், ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கியப் புள்ளி ஒருவரின் மகன் தனது காரில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் காரில், சிறிது அளவு ஹெராயினும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநிலக் காவல் படையின் தலைவர் டத்தோ ஷாஸேலி காஹார் தெரிவித்தார். அவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.








