கோலாலம்பூர், அக்டோபர்.29-
அரசாங்கம் முன்மொழிந்துள்ள நகர்ப்புற புதுப்பித்தல் உத்தேசச் சட்ட மசோதாவைப் பலர் ஆதரிக்கின்றனர் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்தத் திட்டத்தில் நலன் சார்ந்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் உத்தேசப் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசியத் திட்டமிடல் காங்கிரஸ் கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தின் இந்த பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று இன்று மக்களவையில் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.








