Oct 2, 2026
Thisaigal NewsYouTube

தடுப்புக் காவலில் மணிசேகரன் மரணம்: விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்துவீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தடுப்புக் காவலில் மணிசேகரன் மரணம்: விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்துவீர்

கோலாலம்பூர், டிசம்பர்.06-

போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த ஒரு லோரி ஓட்டுநரான மணிசேகரன் மோகன் என்பவரின் விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்துமாறு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு மற்றம் தடுப்புக் கைதிகள் மரணம் மீதான புலனாய்வுப் பிரிவுக்கு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த லோரி ஓட்டுநர், தடுப்புக் காவலில் எவ்வாறு மரணம் அடைந்தார் என்பதற்கான காரணத்தை அறிவதற்கு இவ்விவகாரத்தை மரண விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு ஏதுவாக விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்துமாறு போலீஸ் துறைக்கு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

41 வயது மணிசேகரன், போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்து, ஒன்பது மாதங்கள் ஆகியும் அவரின் மரணத்திற்கானக் காரணத்தை அறிவதற்கு போலீஸ் துறை இன்னும் விசாரணை நடத்தாதது குறித்து இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து சட்டத்துறை அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →