Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்த லோரி; ஓட்டுநர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்த லோரி; ஓட்டுநர் உயிரிழப்பு

Share:

பகாங், ஜூன் 20-

மின்சார ஜெனரேட்டர்-ரை ஏற்றி வந்த HINO வகை லோரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த பள்ளத்தினுள் நுழைந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

பகாங், பெக்கான், ஜாலான் குவாந்தான்-செகாமட் சாலையின் 72ஆவது கிலோமீட்டரில், நேற்றிரவு மணி 8.55க்கு அந்த விபத்து நிகழ்ந்தது.

கடும் காயங்களுக்கு இலக்கான 29 வயது முஹம்மது ஃபர்ஹான் டகாங் எனும் அவ்வாடவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

விபத்து நிகழ்வதற்கு முன்பு, அங்கு தற்காலிக மேம்பாலத்திற்கு செல்வதற்கான வழி குறித்து வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையை, அவ்வாடவர் கவனிக்காமல் வேகமாக லோரியை செலுத்தியுள்ளார்.

அதன் பின்னரே,அந்த விபத்து நேர்ந்துள்ளது, தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக, பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பர்டென்டன் முகமது ஜைதி மாட் ஜின் தெரிவித்தார்.

சடலம் உடற்கூறு ஆய்வுக்காக, பெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை, 1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, முகமது ஜைதி கூறினார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது