Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தவறானத் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தவறானத் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்

டிச.6-

மலேசியாவில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வானிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் தவறானத் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று மலேசியப் பொதுப் பாதுகாப்புப் படை APM கேட்டுக்கொண்டுள்ளது.

தவறான தகவல்கள் மீட்புப் பணிகளை பாதிக்கும். மக்கள் தவறான இடங்களுக்கு சென்று உதவி தேடுவதால், உண்மையிலேயே உதவி தேவைப்படும் இடங்களில் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மேலும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என APM தெரிவித்துள்ளது.

தற்போது, APM தன்னார்வலர்கள் மழைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகின்றனர். மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளனர்.

ஆகவே, தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். உதவிகளை வழங்க விரும்பும் நபர்கள், உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என APM அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →