மலாக்கா, ஆகஸ்ட்.12-
சொந்த மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டது, அவரின் நிர்வாணப் படங்களை வைத்திருந்தது தொடர்பில் தந்தை ஒருவருக்கு எதிராக மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 52 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மின்சாரக் கடை ஒன்றில் டெக்னிஷனாக வேலை செய்து வரும் 41 வயது நபர், நீதிபதி ஹடேரியா சிரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு 52 குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டன.
6 பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த நபர், தனது 18 வயது மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு சிறை மற்றம் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் 52 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.








