Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வெட்டுமரம் விழுந்து தொழிலாளர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெட்டுமரம் விழுந்து தொழிலாளர் பலி

டுங்குன், நவ.12-


வெட்டு மர நடவடிக்கையின் போது, சரிந்து விழுந்த மரத்தில் சிக்கிய தொழிலாளர் ஒருவர், உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.34 மணியளவில் திரெங்கானு, டுங்குன், கம்போங் உலு, பக்கா வெட்டுமர காட்டுப்பகுதியில் நிகழ்ந்தது.

ஓர் இந்தோனேசியரான 54 வயது தொழிலாளி, 250 செண்டிமீட்டர் சுற்றளவுக்கொண்ட ராட்ஷச வெட்டுமரத்தின் கீழ் சிக்கியதாக தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் அல் முக்தாபி பில்லா ஷா தெரிவித்தார்.

கனரக இயந்திரத்தின் உதவியுடன் அந்த வெட்டுமரம் அகற்றப்பட்டு, அந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. உரிய நடவடிக்கைக்காக அந்த தொழிலாளியின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அல் முக்தாபி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →