Oct 18, 2026
Thisaigal NewsYouTube

தொழிலாளிக்கு தூக்குத் தண்டனை நிலைநிறுத்தம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொழிலாளிக்கு தூக்குத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா,செப்டம்பர் 26-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று உடன்பிறப்புகளை வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக உடல் உழைப்புத் தொழிலாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

தனக்கு எதிரான தண்டனையை குறைக்கும்படி ஷாருல் பித்ரி ஜூசோ என்ற அந்த ஆடவர் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற சபா, சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செபில் தள்ளுபடி செய்தார்.

41 வயதுடைய அந்த நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பேரா, தெலுக் இந்தான், கம்போங் சுங்கை ஹாஜி முஹம்மது செலிகோ என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது, 3 வயது மற்றும் 2 வயதுடைய மூன்று உடன்பிறப்புகளை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்