மலாய்க்காரர்களை ஒற்றுமைப் படுத்துவதாக கூறி கொண்டு, அந்தக் கட்சி எந்தக் கூட்டணியோடு இணைந்தாலும், அதன் போக்கினால் அது வெளியேற்றப்படும் என அம்னோ கட்சியின் தலைவரும் நாட்டின் துணை பிரதமருமான டத்தோ அமாட் சாயிட் ஹமிடி, அம்னோ கட்சியின் ஆண்டு விழாவின் போது தனது உரையில் இவ்வாறு கூறினார்.
2019 ஆம் ஆண்டு அம்னோவுடன் பாஸ் கட்சி மலாய் காரர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக இணைந்து முவாஃபாகாட் நேஷ்னல் என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டது. பிறகு பெரிக்கத்தான் நெசனலுடன் அதே மாலய்காரர்களை ஒற்றுமை படுத்துவதாக கூறிக்கொண்டு அதில் இணைந்து கொண்டது. தற்பொழுது மலாய் பிரகடனம் என கூறிக்கொண்டு மகாதீருடன் இணைய முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேஷ்னலுடன் கூட்டணி வைத்து கொண்டது அம்னோ கட்சிக்கு விருப்பமில்லை என்பது உண்மை என தனது உரையில் அவர் கூறினார். பாஸ் கட்சியினால் மலாய்காரர்களை ஒற்றுமைப் படுத்த இயலாது என்பதால் மிக விரைவில் பெரிக்கத்தான் நெசனலுடனான கூட்டணியிலிருந்து அந்தக் கட்சி வெளியேறும் சாத்தியம் உண்டு என சாயிட் ஹமிடி தெரிவித்தார்.








