கோலாலம்பூர், ஜனவரி.09-
துருக்கி குடியரசிற்கு மேற்கொண்ட மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.
பிரதமரின் விமானம் இன்று அதிகாலை சுபாங் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. ஓய்வு எடுக்காமல், விமான நிலையத்திலிருந்து நேரடியாக புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், இறைவன் அருளில் துருக்கி குடியரசிற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக நாடு திரும்பினேன். உடனடியாக அலுவலகத்திற்குச் சென்று அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றேன். மலேசியாவிற்காக என்று டத்தோ ஶ்ரீ அன்வார் பதிவிட்டுள்ளார்.








