தமக்கு எதிராக அவதூறான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள துன் மகாதீர் முகமது, பிரதமர் பதிலளிப்பதற்கு ஏதுவாக, கூடுதல் கால அவகாசத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
2 வாரங்களுக்கு முன்பு, ஷா ஆலாமில் நடைபெற்ற பி.கெ.ஆர் கட்சியின் சிறப்பு தேசிய மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆற்றிய உரை தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.
நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகித்த 22 ஆண்டு காலத்தில், குடும்பத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக, அன்வார் குற்றஞ்சாட்டி இருப்பதாக கூறி, துன் மகாதீர் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


