May 20, 2026
Thisaigal NewsYouTube
4 கிலோ போதைப் பொருள் விநியோகித்ததாகக் குற்றச்சாட்டு !
தற்போதைய செய்திகள்

4 கிலோ போதைப் பொருள் விநியோகித்ததாகக் குற்றச்சாட்டு !

Share:

கடந்த வாரம் 4 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப் பொருளை விநியோகித்ததாக இரு ஆடவர்கள் மீது நெகிரி செம்பிலான் கெமாஸ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்ச்சாட்டப்பட்டது.

மஜிஸ்ட்ரெட் கர்தினி கஸ்ரான் முன்னிலையில் 33 வயது சீ வய் லுன், 34 வயது முஹமாட் குமரன் ஆறுமுகம் ஆகியோர் இ கடந்த நவம்பர் 23 ஆம் தேதி ஜாலான் பூலாய் 1 பன்டார் உத்தாமா தம்பின் எனும் முகவரியில் இவ்விருவரும் போதைப் பொருளை விநியோகித்ததாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து எந்தவித மாக்குமூலமும் பதிவு செய்யப்பட வில்லை.

எதிர்வரும் சனவரி 11 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் அன்றைய நாளில் வேதியியல் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

4 கிலோ போதைப் பொருள் விநியோகித்ததாகக் குற்றச்சாட்டு ! | Thisaigal News