ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.08-
மலேசியாவில் இருந்தவாறு ஐ.எஸ். தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு கொண்டிருந்ததாக நம்பப்படும் இரண்டு வங்காளதேசிகள், இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
30 மற்றும் 35 வயதுடைய அந்த இரண்டு வங்காளதேசப் பிரஜைகள் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்குக் கொண்டு வரப்பட்ட வேளையில் தங்களுக்கு மலாய் மொழி தெரியாது என்று தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு ஸ்தம்பித்தது.
இதனைத் தொடர்ந்து வங்காளதேச மொழிப் பெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க ஏற்பாடு செய்யுமாறு பிராசிகியூஷன் தரப்பை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஐ.எஸ். தீவிரவாதக் கும்பலுக்கு நிதி உதவி வழங்குவதற்கு இங்குள்ள வங்காளதேசிகளிடம் பண வசூலிப்பு நடத்தும் ஏஜெண்டைப் போல் செயல்பட்டதாக நம்பப்படும் இந்த இரண்டு வங்காளதேசிகளும் கடந்த ஜுன் மாதம் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, கெலாங் பாத்தாவில் பிடிபட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஐ.எஸ். தீவிரவாதக் கும்பல் தொடர்புடைய சில பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.








