Dec 4, 2025
Thisaigal NewsYouTube
13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பூமிபுத்ராக்களுக்கு மிகப் பெரிய ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பூமிபுத்ராக்களுக்கு மிகப் பெரிய ஒதுக்கீடு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-

13வது மலேசியத் திட்டத்தின் கீழ் பூமிபுத்ராக்களின் செலவினத்திற்கு, மிகப் பெரிய தொகையை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பூமிபுத்ராக்களுக்கு மிகப் பெரிய தொகையை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் புத்ரா 35 எனும் 2035 ஆம் ஆண்டுக்கான பூமிபுத்ரா பொருளாதார உருமாற்றுத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

பூமிபுத்ராக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள தீவிர முயற்சி மற்றும் ஈடுபாடு திட்டங்களில் புத்ரா 35 எனும் திட்டமும் அடங்கும் என்று பிரதமர் விளக்கினார்.

இந்த 13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ரா சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் காட்டிலும் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஒற்றுமை அரசாங்கம் அதிக தொகையை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படும் குற்றறச்சாட்டை பிரதமர் அன்வார் மறுத்தார்.

வாழ்க்கைச் செலவின உயர்வால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீன புதிய கிராமங்களுக்கு அதிக ஒதுக்கீட்டை வழங்கியிருக்கும் ஒற்றுமை அரசாங்கம், பூமிபுத்ரா சமூகத்திற்கு எதுவுமே ஒதுக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றத்தில் தாம் தாக்கல் செய்த அறிக்கையை இன்னும் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.

அறிக்கையைப் படிக்கவில்லை என்றால் முதலில் படித்து விட்டு வாதத்தை முன்வைக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Related News